கடந்த சில காலங்களாக நமதூரில் வயது வித்தியாசமின்றி பலர் புற்றுநோயால் மரணமடைந்து உள்ளனர். கேன்சர் நோயால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையால் நமதூர் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கொடிய நோயினை நமதூரிலிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்க, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப்படி, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நமதூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்வர்களின் விபரங்களை சேகரிக்கப்பட உள்ளன.
இதன் மூலம் நமதூரை புற்றுநோய் தாக்குவதற்குண்டான காரணங்கள், எவ்வகையான புற்றுநோய், எந்தெந்த வயதினரை தாக்கியுள்ளது என்பதை கண்டறிந்து, அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை முறைப்படி எடுக்க ஏதுவாக அமையும். எனவே தங்களின், தங்கள் குடும்பத்தினரின் மற்றும் நம் சமுதாயத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு கணக்கெடுப்பிற்காக தங்களிடம் வரவிருக்கும் வாவு வஜீஹா கல்லூரி மாணவியரிடம் (தன்னார்வ தொண்டர்கள்) புற்றுநோய் குறித்த ஆய்வு படிவங்களை (Cancer Surey Forms) முழுமையாக பூர்த்தி செய்து கொடுத்து ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இன்ஷாஅல்லாஹ் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு தகவலும் மதிப்புமிக்க ஓர் உயிரை பாதுகாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். என்று ரியாத், ஜித்தா மற்றம் தம்மாம் காயல் நலமன்றங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன

No comments:
Post a Comment