Monday, January 31, 2011

தம்மாம் காயலர்கள் தங்கிய கட்டிடத்தில் ''தீ'' விபத்து.


கடந்த வியாழன் பின்னேரம் வெள்ளிக்கிழமை இரவு சவுதி அரேபியா தம்மாமில் அமைந்துள்ள புகழ்பெற்ற சீகோ கட்டிடம் அருகே அமைந்துள்ள
கட்டிடதில் தீடீர்ரென இரவு 3:00 மணியளவில் ''தீ'' விபத்து எற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ்பகுதியில் கூடுதலாக தோல் பொருள்கள் மற்றும் கைக்கடிகார பழுது நீக்கும் கடைகளும் இருந்துள்ளன, இவைகள் முற்றிலும் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3 அறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டு சுமார் 30 நிமிடத்தில் தீ அணைக்கும் பணி துவங்கியதாக இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட வலீத் மற்றும் உஸாமா என்ற நபர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டிடத்தில் நமதூரைச் சேர்ந்த சகோதரர்களும் தங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனின் கிருபையால் இந்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி.
அரபு நீயூஸ்.

No comments:

Post a Comment