Friday, January 28, 2011

அரசாங்கத்தின் ஏழைக்குமர்களுக்கு திருமண உதவித்திட்டம்.

ஏழைக் குடும்பத்தின் திருமணபெண்ணிற்கு உதவும் திட்டத்தின் அடிப்படையில் ரூ.25000 (இருபத்தி ஐந்தாயிரம்)த்தை தமிழக அரசு வழங்குகிறது. மிக எளிய முறையில் இத்தொகையை பெறலாம். ஏழைக்குமரை எப்படி கரைசேர்ப்பது என்று ஏங்கித் தவிக்கும் எத்தனையோ பேர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். ஏழைக் குமரை கரைசேர்க்க வேறு எவரின் உதவியையும் எதிர் நோக்காமல் நம் அரசாங்கத்தின் மூலம் நம் வரிப் பணத்தில் இருந்து நம் பணத்தை பெற்றுக்கொள்கிறோம் என்ற உரிமையில் இந்த உதவியைபெற விண்ணப்பிக்கலாம்.


இந்த திட்டத்தை பெற செய்யவேண்டிய மிக எளிமையான முறைகள் :

1) மணப் பெண்ணின் பெயர்
2) மணப்பெண்ணை காப்பாளர் பெயர், விலாசம், உறவு
3) மணப் பெண்ணின் பிறந்த தேதி, மாதம், வருடம் (மணப்பெண் 18 வயது நிறம்பியவராக இருக்க வேண்டும்)
4) மணப்பெண் 10-வது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் (பள்ளி சான்றிதழ் இணைக்கவேண்டும்)
5) குடும்ப வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும் (தாசில்தார் சான்றிதழ் இணைக்கவேண்டும்)
6) திருமண அழைப்பிதழ் விபரம் (அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் இணைக்கபட வேண்டும்)
7) மணமகனின் பெயர் மற்றும் முகவரி
8) மணமகனின் தொழில்
9) சாட்சிகள் இரண்டு நபர்கள்

மேற்கண்ட விபரங்களை திருமண உதவிபெரும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, திருச்செந்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் திருமண தேதியில் இருந்து சுமார் 15 தினங்களுக்கு முன் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சரிபார்த்த பின்னர் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து உதவிபெற தகுதியான நபர் அழைக்கப்பட்டு இருபத்தி ஐந்தாயிரம் தொகைக்கான காசோலை வழங்கப்படும். தன்மானத்துடன் நாம் நம் குமர்களை கரைசேர்க்கலாம்.

No comments:

Post a Comment