சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது செயற்குழுக் கூட்டம் 21.01.2011 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
கூட்ட நிகழ்வுகள்:
http://www.knmdammam.blogspot.com/
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது செயற்குழுக் கூட்டம் 21.01.2011 வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு, மன்றத் தலைவர் டாக்டர் இத்ரீஸ் தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்றது. சகோதரர் ஷாதுலீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
துவக்கமாக, நமதூர் காயல்பட்டினத்தில் சமீப காலமாக அதிகளவில் பொதுமக்களை மரண பயத்தில் ஆழ்த்தி வரும் கொடிய புற்றுநோய் குறித்து தலைவர் அவர்கள் விளக்கிப் பேசியதுடன், உறுப்பினர்களின் மருத்துவ சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கமளித்தார்.
CFFCக்கு பாராட்டு:
அத்துடன், இக்கொடிய நோய் நமதூரில் பரவலாகக் காணப்படுவதற்கான காரணிகளைக் கண்டறிவதற்காக அய்க்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் சகோதரர் சாளை ஷேக் ஸலீம் தலைமையில் அமையப் பெற்றுள்ள Cancer Fact Finding Committee - CFFC குழுவின் செயல்பாடுகள், அதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் குறித்தும் தலைவர் விளக்கமாக எடுத்துரைத்ததோடு, CFFC குழுமத்திற்கு மன்றத்தின் சார்பில் ஒட்டுமொத்தமாக பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
புற்றுநோய் கணக்கெடுப்பு:
பின்னர், விரைவில் நமதூர் காயல்பட்டினத்தில், தம்மாம், ரியாத், ஜித்தா காயல் நற்பணி மன்றங்கள் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் புற்றுநோய் கணக்கெடுப்பு (Cancer Survey) குறித்தும் அவர் விளக்கிப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சகோதரர் எஸ்.இப்னு சஊத், நமது முஸ்லிம் சமுதாய பெண்களின் நலனுக்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டு - நம்மால் சரியாக கவனிக்கப்படாமல் நடைபெற்று வரும் “தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க”த்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்.
மேலும் கல்வி, சிறுதொழில் முன்னேற்றத்திற்கான தகவல்கள் குறித்து அவர் ஆற்றிய தெளிவான உரை, உறுப்பினர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு:
அடுத்து, பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் மன்றத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஏ.ரஃபீக், துணைத்தலைவர் எம்.அய்.மெஹர் அலீ மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இரவு உணவு விருந்துபசரிப்பு நடைபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக,
முத்துவாப்பா,
அல்கோபர், சஊதி அரபிய்யா.
No comments:
Post a Comment