Friday, January 28, 2011

துவங்கியது புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படத்திற்கான ஒளிப்பதிவு!

காயல்பட்டினத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் குறும்படம் தயாரித்து வெளியிட முடிவு செய்யப்பட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் காயல்பட்டினம் மருத்துவர் தெருவிலும், பின்னர் சென்னையிலும், பின்னர் மூன்றாம், நான்காம் கூட்டங்கள் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கிலும் நடைபெற்றன.


இந்நிலையில், குறும்பட ஒளிப்பதிவாளர் தொழில்நுட்பக் குழு 27.01.2011 அன்று (நேற்று) காயல்பட்டினம் வந்தடைந்துள்ளனர். நகரின் முக்கிய இடங்கள், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்குத் தேவையான காட்சிகளை அவர்கள் ஒளிப்பதிவு செய்யத் துவங்கிவிட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று காலையில் காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகத்தில், நகரின் சுகாதாரப் பணிகள் குறித்து நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார் ஆகியோரின் கருத்துக்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.



பின்னர் நேற்று மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.



மஸ்ஜித் மீக்காஈல் நிர்வாகி ஹாஜி சுல்தான் தலைமையில் கூடிய அக்கூட்டத்தில், ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய தகவல்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டதுடன், அக்கூட்டத்தின் சில நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.





இன்று நண்பகலில் ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும், நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளின் கத்தீப் - பேருரையாளர்களின் புற்றுநோய் குறித்த கருத்துக்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment