சிறந்த பள்ளி – 2011 - அறிவியல் கண்காட்சிக்கான விருது.
நமது காயல் நற்பணி மன்றம் தம்மாம் இந்த கல்வியாண்டு முதல் காயல் நகரிலேயே சிறந்து விளங்கும் பள்ளிக்கு சிறந்த பள்ளி – 2011 – அறிவியல் கண்காட்சிக்கான விருது என்ற விருதை இன்ஷா அல்லாஹ் வழங்கி சிறப்பிக்க உள்ளது.
நம் காயல் நகரின் சிறந்த பள்ளியை வெறுமனே ஊக்குவிப்பதோது விட்டு விடாமல் அந்த ஊக்குவிப்பையும் ஒரு முதலீடாக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காயல் நற்பணி மன்றத்தின் 2011 க்கான சிறப்பு திட்டங்களின் கீழ் காயல் பஸ்ட் டிரஸ்டின் சீரிய ஒத்துழைப்புடன் அதன் “Best School Overall -2010-11” தேர்வின் அடிப்படையில் ரூபாய் 25000 க்கான பரிசு ஒன்றை சிறந்த பள்ளிக்கு வழங்க இன்ஷா அல்லாஹ் தீர்மானிக்க பட்டுள்ளது. இந்த பரிசுக்கான பணத்தை சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்படும் பள்ளியானது வருகின்ற ஜுலை மாதத்தில் ஒரு அறிவியல் கண்காட்சியை செவ்வனே நடாத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற சந்தியுங்கள் முதல் மாணவரை -2011 பரிசளிப்பு விழாவில் வைத்து இந்த பரிசையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
சிறந்த பள்ளி – 2011 - அறிவியல் கண்காட்சிக்கான விருது ஒரு சிறுகுறிப்பு:
சிறந்த பள்ளியானது காயல் பஸ்ட் டிரஸ்டின் ஒத்துழைப்பில் வருகின்ற ஜுலை மாதத்தில் பள்ளிகளுக்கு இடையிலான ஒரு அறிவியல் கண்காட்சியை நடத்த வேண்டும். அதில் தங்கள் பள்ளியில் இருந்து 6-12 வகுப்பிற்குட்பட்ட மாணவ மாணவிகளை தங்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் முகமாக அவர்களின் ஆசிரியர்களின் துணை கொண்டு சுமார் 10 Scientific Exhibits க்களை கண்காட்சியில் வைக்க வேண்டும். கண்காட்சியை தங்கள் பள்ளி வளாகத்திலேயெ வைத்துக் கொள்ளலாம். இது அவர்களின் அறிவியல் அறிவை வெறுமனே படிப்படோது விட்டு விடாமல் அதை உபயோகித்து உணரும் ஆற்றலை உருவாக்க உதவும். மாணவர்கள் தங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்த செலவிடும் தொகையில் சுமார் 50% இந்த நிதியில் இருந்து கொடுக்க வேண்டும். மீதி 50% மாணவர்களே செலவிட வேண்டும். கண்காட்சி நடத்த செலவிட படும் தொகையையும் பள்ளி இந்த நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
மற்ற பள்ளிகளும்(சிறந்த பள்ளியை தவிர்த்து) இந்த கண்காட்சியில் பங்கு கொள்ளலாம். ஆனால் மாணவர்களே அறிவியல் திறனை வெளிப்படுத்த செலவாகும் முழு (100%) செலவையும் ஏற்க வேண்டும்.
இதில் வெளியூர்,வெளிநாடு வாழ் காயல் மாணவ மாணவிகளும் பங்கு கொள்ளலாம். மற்ற பள்ளிகளுக்கு உண்டான விதிமுறைகள் இவர்களுக்கும் பொருந்தும்.
இறுதியில் சிறந்த அறிவியல் திறனை வெளிப்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு காயல் நற்பணி மன்றம் பரிசுகளை வழங்கும்.
காயல் பஸ்ட் டிரஸ்ட் இந்த கண்காட்சியை சிறந்த பள்ளியோடு இணைந்து நட்த்த அணைத்து ஒத்துழைப்பையும் நல்கும்.
No comments:
Post a Comment