காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிப்பை, சஊதி அரபிய்யாவின் ரியாத், ஜித்தா, தம்மாம் காயல் நற்பணி மன்றங்கள் சார்பில் இக்ராஃ செய்து முடித்துள்ளது.
பெறப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய மேல் நடவடிக்கைகள் குறித்து, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் அதன் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.டி.அபூபக்கர், துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் ஆகியோர், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோருடன் 19.05.2011 அன்று இரவு 08.30 மணிக்கு கலந்தாலோசனை செய்தனர்.
இறுதியில், பெறப்பட்ட தகவல்களை துவக்கமாக கணினியில் பதிவேற்றம் செய்வதெனவும், பின்னர் பல்வேறு பிரிவுகளாக அத்தகவல்களைப் பிரித்தெடுத்து, மருத்துவ நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து, அதனடிப்படையில் இத்தகவல் சேகரிப்புக்கு இணைந்து ஏற்பாடு செய்துள்ள மூன்று மன்றங்களின் கலந்தாலோசனைக்குப் பின் உரிய செயல்திட்டங்களை வகுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:
Post a Comment