Tuesday, June 7, 2011

மே 28இல் இக்ராஃ பொதுக்குழுக் கூட்டம்! புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்!


உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்ராஃசுழற்சிமுறை நிர்வாகத்தின் கீழ், நடப்பாண்டிற்கான புதிய தலைவராக தம்மாம் காயல் நற்பணி மன்றத்தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அக்கூட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ளார். 


கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ செயலர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 28.05.2011 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸின் சிறிய அரங்கில் நடைபெறவுள்ளது.



கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ள அம்சங்கள்: 
சுழற்சிமுறை நிர்வாகத்தின்கீழ் இக்ராஃவின் அடுத்த தலைவராக, தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அவர்களைத் தேர்ந்தெடுத்தல்...

இக்ராஃ சுழற்சிமுறை நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் சிங்கை கா.ந.மன்றத்தின் புதிய தலைவராக ஜனாப் ரஷீத் ஜமான் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவரை இக்ராஃவின் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுத்தல்...

நிர்வாக வசதிகளைக் கருத்தில்கொண்டு பதவி விலகிய செயலாளருக்குப் பகரமாக புதிய செயலாளரைத் தேர்ந்தெடுத்தல்...

நடப்பு பொருளாளர் தான் சென்னையில் வசிப்பதால் செயல்பட இயலாநிலையைத் தெரிவித்ததன் அடிப்படையில் அப்பொறுப்புக்கு புதிதாக ஒருவரைத் தேர்ந்தெடுத்தல்...

குறைந்துள்ள அளவுக்குத் தேவையான செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தல்...

கல்வித்துறை போன்று மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் இக்ராஃவை உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பாக்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் குறித்து கலந்தாலோசித்தல்...

இக்ராஃவின் நிர்வாகச் செலவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது குறித்து கலந்தாலோசித்தல்...

உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இக்ராஃ நடப்பு தலைவரின் அசைபடச் செய்தி: 
இக்ராஃவின் சுழற்சிமுறை நிர்வாகத்தின்கீழ் இதுவரை தலைவராக இருந்த சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவரும் நடப்பு ஆலோகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள் அசைபடம் வாயிலாகத் தெரிவித்துள்ள செய்தியும் இக்கூட்டத்தின்போது உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்படவுள்ளது.

கூட்டம் குறித்து இக்ராஃவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் முறைப்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

வெளியூர்-வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள உறுப்பினர்களுக்கு சிறப்பழைப்பு: 
குறிப்பாக, வெளியூர் - வெளிநாடுகளிலிருந்து தாயகம் வந்துள்ள இக்ராஃவின் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு, இக்ராஃ நிர்வாகக் குழுவினர் சார்பில் இச்செய்தியின் வாயிலாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

காயல்பட்டினம் நகர மாணவ சமுதாயம் கல்வியில் உயர்நிலையை எட்டுவதற்காக உலக காயல் நல மன்றங்களின் வழிகாட்டுதலில் இக்ராஃ மேற்கொண்டு வரும் நலத்திட்டங்களுக்கு உறுதுறை புரியும் வகையில், இதுவரை இக்ராஃவில் உறுப்பினராகாதவர்கள், ஆண்டுச்சந்தா ரூபாய் முன்னூறு மட்டும் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தந்து, உறுப்பினராகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 


இவ்வாறு இக்ராஃ செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment