Tuesday, June 7, 2011

ஜூன் 10இல் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழு! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!

சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 10.06.2011 அன்று நடைபெறவுள்ளது. செயற்குழுக் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அன்பின் தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 



நம் மன்றத்தின் 60ஆவது செயற்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 10.06.2011 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின், மன்றத் தலைவர் ஹாஜி டாக்டர் இத்ரீஸ் தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

செயற்குழு உறுப்பினர்கள் குறித்த காலத்தில் தவறாமல் கலந்துகொண்டு, நம் மன்றத்தால் செய்யப்பட்டு வரும் நகர்நலப் பணிகளுக்கு ஊக்கமும், உற்சாகமும் தர வருமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். 


இவ்வாறு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் அழைப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment