Tuesday, June 7, 2011

ப்ளஸ் 2 - மாவட்டத்தின் முதன்மாணவர் உள்ளிட்ட சாதனை மாணவர்களுக்கு தம்மாம் கா.ந.மன்றம் பாராட்டு!

நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர் மற்றும் உளவியல் பாடத்தில் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்ற மாணவியைப் பாராட்டி சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து, அம்மன்றத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில், மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் இவ்வாண்டு நடைபெற்று முடிந்துள்ள ப்ளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவிலும், நகர அளவிலும் சாதனைகள் புரிந்துள்ள மாணவ-மாணவி செல்வங்களை எமது தம்மாம் காயல் நற்பணி மன்றம் பெருமகிழ்வுடன் பாராட்டுகிறது.

நமது மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளியின் மாணவர் A.H.அமானுல்லாஹ்,

நகரளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள எல்.கே. மேல்நிலை பள்ளி மாணவர் S.D.முஹம்மத் அஃப்ரஸ்,

நகரளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ள சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி சொளுக்கு M.A.C.உம்மு சரீஹா ஆகியோருக்கு எங்கள் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் உளவியல் பாடத்தில் 200க்கு 184 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ள தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி R.முத்துமாரியையும் எம்மன்றம் பாராட்டுகிறது.

இன்ஷாஅல்லாஹ் வருங்காலத்தில் உங்களை நாட்டிற்கும், ஊருக்கும், நம் சமுதாயத்திற்கும் சேவை செய்ய கூடிய நன்மக்களாக எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்குவானாக.ஆமின். மேலும் இந்த வெற்றிக்காக உழைத்த நகரின் அனைத்துப்பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பெற்றோர்கள் மற்றும் நமதூரின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட்டு வரும் இக்ராஃ கல்வி சங்கத்திற்கும் எங்கள் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 


இவ்வாறு தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment