Tuesday, June 7, 2011

புற்றுநோய் தகவல் சேகரிப்பு: வெளியுலக காயலர்களுக்கு இக்ராஃ அவசர வேண்டுகோள்!


காயல்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புற்றுநோய் தகவல் சேகரிப்பு (கேன்சர் சர்வே) குறித்து, வெளியுலக காயலர்களுக்கு இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் பின்வருமாறு:- 


காயல்பட்டினத்தில் புற்றுநோய் தடுப்பு முயற்சிகளை முறைப்படி செய்திடும் பொருட்டு புற்றுநோய் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் மாசிலாமணியின் வழிகாட்டுதலின்படி, ரியாத், தம்மாம், ஜித்தா ஆகிய சஊதி அரபிய்ய காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஏற்பாட்டில் நகரில் புற்றுநோய் குறித்த தகவல் சேகரிப்பு (கேன்சர் சர்வே) நடைபெற்று வருகிறது.

இக்ராஃவின் அடையாள அட்டை அணிந்த பெண் தன்னார்வலர்கள் நகரின் அனைத்து தெருக்களிலும் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

எனவே, வெளிநாடுகளிலும் - வெளியூர்களிலுமிருக்கும் காயலர்கள் இந்த வேண்டுகோளை மிகவும் அக்கறையுடன் கவனத்தில் கொண்டு, உங்களுக்குத் தெரிந்து யாரேனும் நமதூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்திருந்தாலோ, தற்சமயம் சிகிச்சை பெற்று வந்தாலோ அல்லது குணமடைந்திருந்தாலோ, அவர்களைப் பற்றிய தகவல்களை தயக்கமின்றி தந்துதவ தொலைபேசி மூலம் தாங்கள் யாவரும் தெரிவித்து முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

ஒருவேளை உங்கள் பகுதிகளுக்கு தன்னார்வப் பணியாளர்கள் வந்து, படிவங்களைத் தந்து - திரும்பப் பெற்றுச் சென்றிருந்தால், அதன் பின்னரும் 0091 4639 285650 என்ற இக்ராஃவின் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டு தெரிவித்தால், கேள்விப்படிவங்கள் சம்பந்தப்பட்டவர்களின் இல்லம் தேடி தரப்படும் என்பதையும், பெறப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வல்ல அல்லாஹ் இக்கொடிய உயிர்க்கொல்லி நோயை நமதூரிலிருந்து முற்றிலும் அப்புறப்படுத்தியருள்வானாக, ஆமீன். 


இவ்வாறு அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் தகவல் சேகரிப்பு குறித்த பிரசுரம் பின்வருமாறு:-



புற்றுநோய் தகவல் பெறுவதற்கான கேள்விப்படிவம் பின்வருமாறு:-


No comments:

Post a Comment