Monday, October 24, 2011

அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள்! பரிசு பெற்றோர் விபரம்!!

தம்மாம் காயல் நற்பணி மன்றத்துடன் இணைந்து கடந்த ஜூலை 28 (வியாழன்) - சுபைதா மேல்நிலைப்பள்ளி, நகர பள்ளிக்கூடங்களுக்கு இடையிலேயான மாபெரும் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.


பேராசிரியர் சுப்பையா பாண்டியனின் அறிவியலுடன் விளையாட்டு (FUN WITH SCIENCE) நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பள்ளிக்கூட மாணவர்களுக்கு இடையிலேயான கண்காட்சி மற்றும் போட்டி ஜலாலியா நிக்காஹ் மஜ்லிசின் துணை அரங்கத்தில் (Mini Hall) நடைபெற்றது.

நகரின் ஏழு பள்ளிக்கூடங்களில் இருந்து சுமார் 35 அணிகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாணவியர் தரப்பில் 32 அணிகளும், மாணவர் தரப்பில் 39 அணிகளும் பங்கேற்றன. 71 அணிகளில் மொத்தம் 159 மாணவர்கள் இடம்பெற்றனர்.

இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி அன்று மாலை நடைபெற்றது.



மாணவர் N.M.Z. அஹ்மத் முஹியதீன் ஓதிய குர்ஆன் வசனங்களுடன் துவங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு சுபைதா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதர் சாஹிப் தலைமை வகித்தார்.





தலைமையுரையைத் தொடர்ந்து, சென்னை பிரெசிடென்சி கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியரும், மக்கள் தொலைக்காட்சியில் - மக்கள் எளிதாக புரிந்துகொள்ளும் முறையில் ஏன்? எதற்கு? எப்படி? போன்ற அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்துபவருமான பேராசிரியர் சுப்பையா பாண்டியனின் சிறப்புரை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அறிவியல் கண்காட்சி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு நிகழ்ச்சிகளை ஜித்தாஹ் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஒய்.எம்.ஸாலிஹ் ஒருங்கிணைத்தார்.



முதல் பரிசு
படைப்பு:ONE RUPEE MOBILE CHARGER
பள்ளிக்கூடம்: எல்.கே.மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
பரிசுத்தொகை: ரூபாய் 3,000/-
மாணவிகள்:
(1) எஸ்.ஜே.அனிஷா வர்ஜின் மேரி
(2) எஸ்.ஐ. ஆலியா சுல்தானா
(3) ஏ.என். அஸ்ஹருன்னிஷா 




இரண்டாம் பரிசு
படைப்பு: SOLAR BASED AUTOMATIC STREET LIGHT
பள்ளிக்கூடம்: எல்.கே. மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
பரிசுத்தொகை: ரூபாய் 2,000/-
மாணவிகள்:
(1) எஸ்.ஏ.அஹ்மத் முஜாஹிதா
(2) ஏ.சேர்மா
(3) ஜே.எஸ்.சிராஜ் முவஃப்பிகா 




மூன்றாம் பரிசு
படைப்பு: WATER LEVEL INDICATOR
பள்ளிக்கூடம்: சுபைதா மேல்நிலைப்பள்ளி
பரிசுத்தொகை: ரூபாய் 1,000/-
மாணவிகள்:
(1) எஸ்.சுபைதா ஷகூரா
(2) எம்.எம்.முபல்லிகா
(3) எஸ்.எம்.எஸ்.ஃபாத்திமா நுஸ்ஃபா




ஆறுதல் பரிசுகள் 
(1)
படைப்பு: SAND CLOCK
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலைப்பள்ளி
பரிசுத்தொகை: ரூபாய் 500/-
மாணவர்கள்:
(1) ஜே.மொஹிதீன் அப்பாஸ்
(2) ஆர்.மந்திர மூர்த்தி 




(2)
படைப்பு: PERISCOPE
பள்ளிக்கூடம்: எல்.கே. மேல்நிலைப்பள்ளி
பரிசுத்தொகை: ரூபாய் 500/-
மாணவன்:
(1) அபுல் ஹசன் 



சிறப்பு விருந்தினர் பேராசிரியர் சுப்பையா பாண்டியனுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசை சுபைதா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதர் சாஹிப் மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.ஜெஸீமா ஆகியோர் இணைந்து வழங்கினர்.



அறிவியல் காண்காட்சி மற்றும் போட்டி நிகழ்ச்சியினை தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ் புஹாரியின் ஒருங்கிணைப்பில், சுபைதா மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர்குழு, இக்ராஃ கல்வி சங்க நிர்வாகிகள்/உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment