கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மன்றத்தின் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ், துணைத்தலைவர் எம்.ஐ.மெஹர் அலீ, செயலர் எஸ்.ஏ.அஹ்மத் ரஃபீக் ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்தறிக்கை பின்வருமாறு:-
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நடைபெற்று முடிந்த நமதூர் நகராட்சி தேர்தலில் மக்களின் அமோக ஆதரவில் வெற்றி பெற்று ,நமதூர் நகராட்சி மன்றத்தின் தலைவியாக பொறுப்பேற்க இருக்கும் சகோதரி ஆபிதா அவர்களை எம் காயல் நற்பணி மன்றம் மனமார வாழ்த்துகிறது.
மேலும் 18 வார்டுகளிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கும், வெற்றிக்கு முனைந்தவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
தேர்தல் களத்தில் குதிக்குமுன் அறுதியிட்டுக் கூறிய அத்தனை நற்பணிகளையும் உறுதியுடன் நிறைவேற்றித்தந்து நம் காயல்பதியின் நலன் ஒன்றையேகருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு நீங்கள் ஆற்ற இருக்கின்ற நற்காரியங்களில் உங்களோடு உறுதுணையாக நின்று எம் மன்றம் செயல்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment