Monday, October 24, 2011

தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்!


தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60-வது பொதுக்குழு கூட்டம் கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதுகுறித்து அம்மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாவது :-


Dammam.jpg
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழு 21.10.2011. வெள்ளியன்று சகோதரர் பாலப்பா அஹ்மதுவின் இல்லத்து நீண்ட உள்ளரங்கில் மக்ரிப் தொழுகைக்குப்பின் நடந்தேறியது.
kirath.JPG
சகோதரர்.நஹ்வி அபூபக்கர் அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைக்க - இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் பாலப்பா அவர்களின் பாலகன் யூசுப் சாஹிப் அழகான முறையில் வரவேற்புரை நிகழ்த்தி வந்தோர் அனைவரையும் வியக்க வைத்தார் .
welcomespeech.JPG
தலைவர் முன்னுரை: அடுத்து தலைவர் முன்னுரையில் டாக்டர் . இத்ரீஸ் அவர்கள் இந்நாள் வரையில் நற்பணி மன்றம் செவ்வனே நடந்தேற ஒன்றுபட்ட கருத்துக்களுடன் உறுதுணையாய் நின்ற அனைத்து சகோதரர்களையும் நெஞ்சார்ந்த நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
drspeech.JPG
மேலும் சிறப்பு விருந்தினராக  மலேசியாவில் இருந்து வந்து கலந்து கொண்ட மலேசிய தமிழ் மேம்பாட்டு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாப். அன்வர் ஹுசைன் அவர்களுக்கும், நம் இஸ்லாமிய சமுதாய முன்னேற்றத்துக்காக தன் இளம் வயது முதல் இடையராது பாடு பட்டு வருபவரும் நம் தலைவர் டாக்டர் அவர்களின் பால்ய நண்பருமாகிய ஜனாப் இப்னு சவூத் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு, மன்றம் தோன்றிய நாள் முதல் இன்று வரை நடந்தேறிய பணிகள் குறித்து அவர்களுக்கு அறிமுக உரையாற்றினார்.
noohaalim.JPG

ஜனாப் நூஹு ஆலிம் அவர்களின் பேருரை :
இறை மறையில் என்னென்ன நற்காரியங்களுக்கு எத்தனை எத்தனை நன்மைகள், மற்றும் ஏழை மக்களின் நலன் காப்போருக்கு இறைவன் அளிக்கும் எண்ணற்ற பரிசுகளும் பலன்களும் குறித்து அழகாகவும் தெளிவாகவும் உரை நிகழ்த்தியது நெஞ்சத்தில் நிம்மதியையும் நெகிழ்வையும் உண்டாக்கியது.
members1.JPG
பொதுச்செயலாளர் உரை :  

அடுத்து உரையாற்றிய பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், உதவி கேட்டு வந்த மனுக்களைப் பரிசீலித்து அதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள் குறித்தும், நம் மன்ற உறுப்பினர்களில் கூடுதல் ஊதியம் பெரும் அங்கத்தினர்கள் பங்கு கொண்டு ''ஸ்பெஷல் ப்ராஜெக்ட்'' என்ற ஒரு விசேஷமான அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக நம் காயல் மக்களில் நலிந்தோருக்கு இது நாள் வரை ஆற்றியிருக்கும் பணிகள் ( கல்வி மேம்பாடு,மருத்துவப்பணி,பழுதடைந்த வீடுகள் செப்பனிடுதல் ) குறித்தும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
chiefguest.JPG

சிறப்பு விருந்தினர் உரை :

இந்நிகழ்ச்சியில் மலேசியாவில் இருந்து கலந்து கொண்ட ஜனாப். அன்வர் ஹுசைன் அவர்களது உரையில் நம் மன்றத்தின் பணிகள், செயல்பாடுகள் குறித்தும் எல்லாவற்றுக்கும் மேலாக கொள்கைக்குளருபடிகள் இல்லாத உள்ளன்போடு கூடிய உறுப்பினர் அனைவரின் ஒற்றுமை குறித்தும் மிகவும் பாராட்டி பேசினார். மேலும் நம் மன்றத்தின் சேவைகள் தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
chiefguset1.JPG
அடுத்து சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட ஜனாப் இப்னு சவூத் அவர்கள் உரையாற்றினார்கள் : 

நம் மன்றத்தின் சேவைகள் குறித்து பாராட்டிப் பேசியதுடன், நம் சமுதாய மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் பலதரப்பட்ட கல்வி உதவித் தொகைகள் குறித்து விவரமாக எடுத்துரைத்து இது பற்றிய விழிப்புணர்வை நமதூர் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமும் அவசரமுமான கடமை என்று கேட்டுக் கொண்டார்.
members.JPG
நகர் மன்றத் தலைவிக்கு வாழ்த்து :

நடைபெற்று முடிந்த காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.ஆபிதா சேக் அவர்களுக்கும் மற்றும் நகரின் 18 வார்டுகளைச் சார்ந்த நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் நம் தம்மாம் காயல் நற்பணி மன்றத்து ஒட்டுமொத்த உறுப்பினர்களின் உளங்கனிந்த உவகை மிகுந்த நல்வாழ்த்துக்களை டாக்டர்.இத்ரீஸ் அவர்கள் தெரிவித்ததோடு தேர்தல் களத்தில் குதிக்குமுன் அறுதியிட்டுக்கூரிய அத்தனை நற்பணிகளையும் உறுதியுடன் நிறைவேற்றித்தந்து நம் காயல்பதியின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றும் அதற்கான உள்ள நலத்தையும் உடல் பலத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள் வானாக என்ற துஆவுடன் தன் உரையை முடித்தார்.
members2.JPG
மருத்துவ சந்தேகங்கள் : 
அடுத்து நடைபெற்ற மருத்துவ கேள்வி பதில் நிகழ்ச்சியில் நம் மன்ற உறுப்பினர்களின் மருத்துவ சந்தேகங்கள் குறித்த கேள்விகளுக்கு (சர்க்கரை வியாதி,இரத்த அழுத்தம் கொழுப்பு கூடுதல், குடல் புண்) தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் டாக்டர்.இத்ரீஸ் அவர்கள் விளக்கம் அளித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.
members3.JPG
உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பின் தேநீர் சிற்றுண்டிகள் சுவையான கறிக்கஞ்சி வழங்கப்பட்டது.
members4.JPG
இறுதியாக தலைவரின் நன்றியுரையில் திருமறையை ஓதி முடித்த அருமை மகனாரின் மகிழ்ச்சியினைக் கொண்டாடும் விதமாக கறிக்கஞ்சி வழங்கிய சகோ.அப்துல் பாரி, திருமணம் முடித்த களிப்பினை உணர்த்த இனிப்பும் காரமும் பகிர்ந்த சகோ.செய்யது அப்பாஸ், மன்ற நிகழ்ச்சிகள் எதுவாயினும் எத்தனையாயினும் திறந்த கதவுகளை மூடாத பரந்த மனம் கொண்ட பாலப்பா, மற்றும் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடந்தேற தங்களின் உழைப்பை நல்கிய யாவருக்கும் மன்றத்தின் சார்பாகத் தன்நெஞ்சு நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.
members5.JPG
இறைமறை துஆவுடன் இனிதே நிறைவுற்றது பொதுக்குழு. வஸ்ஸலாம் ...

No comments:

Post a Comment