Monday, October 24, 2011

தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள்!


தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60-வது பொதுக்குழு கூட்டம் கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதுகுறித்து அம்மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையாவது :-

அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகள்! பரிசு பெற்றோர் விபரம்!!

தம்மாம் காயல் நற்பணி மன்றத்துடன் இணைந்து கடந்த ஜூலை 28 (வியாழன்) - சுபைதா மேல்நிலைப்பள்ளி, நகர பள்ளிக்கூடங்களுக்கு இடையிலேயான மாபெரும் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு தம்மாம் கா.ந.மன்றம் வாழ்த்து!

கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நான்காயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நகர்மன்றத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிதா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

Saturday, October 15, 2011

அக். 21இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழு! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!


சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 60ஆவது பொதுக்குழுக் கூட்டம் 21.10.2011 அன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள அழைப்பு

Tuesday, June 7, 2011

தம்மாம் காயல் நற்பணி மன்றம் சிறந்த பள்ளிக்கு அறிவியல் கண்காட்சி விருது ரூபாய் 25,000 வழங்குகிறது!


சிறந்த பள்ளி – 2011  - அறிவியல் கண்காட்சிக்கான விருது.
நமது காயல் நற்பணி மன்றம் தம்மாம் இந்த கல்வியாண்டு முதல் காயல் நகரிலேயே சிறந்து விளங்கும் பள்ளிக்கு சிறந்த பள்ளி – 2011 – அறிவியல் கண்காட்சிக்கான விருது என்ற விருதை இன்ஷா அல்லாஹ் வழங்கி சிறப்பிக்க உள்ளது.

காயலர் உடல் நலன் ஆய்வு (KAYALPATNAM HEALTH SURVEY) பணிகள் துவக்கம்!

காயல்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள் குறித்து பகுதிவாரியாக ஆய்ந்தறிந்து, அதற்கேற்ப நோய்த்தடுப்பு செயல்திட்டங்களை வகுத்திடும் பொருட்டு, வட அமெரிக்க காயல் நல மன்ற (நக்வா) உறுப்பினர் டாக்டர் அலீ ரஸாவின் தூண்டுதலில்ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயல்திட்டம் “காயல் உடல் நலன் ஆய்வு - KAYALPATNAM HEALTH SURVEY (KHS) 2011“.

எடுக்கப்பட்ட கேன்சர் சர்வேயின் மேல்நடவடிக்கை குறித்து ரியாத் கா.ந.மன்றத்தினர் இக்ராஃவில் ஆலோசனை!

காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிப்பை, சஊதி அரபிய்யாவின் ரியாத்ஜித்தாதம்மாம் காயல் நற்பணி மன்றங்கள் சார்பில் இக்ராஃ செய்து முடித்துள்ளது.